×

ரயில்களுக்கான அட்டவணையில் மாற்றம்; ரயில்வே வாரியம் ஒப்புதல்: ஊரடங்கிற்கு பிறகு புதிய ரயில்வே அட்டவணையின் படி இயக்க திட்டம்

சென்னை: ரயில்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி; ரயில் எண் 12829/12830 சென்னை சென்ட்ரல் - புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் இனி தாம்பரத்தில் இருந்து கிளம்பும், ரயில் எண் 22841/22842 சென்னை சென்ட்ரல் - சாந்த்ரகாச்சி எக்ஸ்பிரஸ் இனி  தாம்பரத்தில் இருந்து கிளம்பும் 16181சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்போது திங்கள்,புதன், சனிக்கிழமைகளில் பதிலாக வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும், 16182  செங்கோட்டை  - 16181சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்போது செவ்வாய், வியாழன், மற்றும் ஞாயிறுக்கிழமைக்கு பதிலாகவெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்,

22657 தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்போது திங்கள்,செவ்வாய், புதன் கிழமைகளுக்கு பதிலாக ஞாயிறு,திங்கள்,புதன் கிழமைகளில் இயக்கப்படும். 22658 நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் தற்போது செவ்வாய்,புதன், வியாழன் கிழமைகளுக்கு பதிலாக திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் இயக்கப்படும். 22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தற்போது  ஞாயிறு,செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளுக்கு பதிலாக ஞாயிறு,செவ்வாய் , வியாழன் கிழமைகளில் இயக்கப்படும். 22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  தற்போது சனி,திங்கள்,வியாழன் கிழமைகளுக்கு பதிலாக சனி,திங்கள், புதன் கிழமைகளில் இயக்கப்படும்.

16779 திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வெள்ளி, ஞாயிறு,செவ்வாய்கிழமைகளுக்கு பதிலாக சனி,திங்கள், புதன் கிழமைகளில் இயக்கப்படும்,16780 ராமேஸ்வரம்  - திருப்பதி எக்ஸ்பிரஸ் வியாழன், சனி, திங்கள் கிழமைகளுக்கு பதிலாக வெள்ளி,ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் இயங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவை அனைத்தும் புதிய ரயில்வே அட்டவணை செயல்பாட்டுக்கு வரும் போது மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Railway Board ,curfew , Schedule for Railways, Railway Board, Approval
× RELATED தென்மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது.....