தொடரும் விலங்குகள் பாதுகாப்பின்மை...தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 14 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..!!

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை உயிரிழப்பை அடுத்து தற்போது  குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 14 யானைகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது. கடந்த 6 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் கோவை மேட்டுப்பாளையம் அருகே கண்டியூரில் நேற்று உயிரிழந்து கிடந்த பெண் யானையை உடற்கூராய்வு செய்ததில் அது சுட்டுக்கொல்லப்பட்டது அம்பலமானது. தமிழகத்தின் யானைகள் உயிரிழப்பில் முக்கியமான மாவட்டமான கோவை மாவட்ட வனப்பகுதியில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 6 யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்துள்ளது வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிமலை காட்டில் இருந்து வெளியேறிய யானை ஊருக்குள் புக முற்பட்ட நிலையில் காது அருகே காயத்துடன் இறந்து கிடந்தது. இந்த நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் யானைக்கு கடந்த 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து உயிரிழந்து வரும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு தரப்பினர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: