×

மராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..!!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் தாராவியில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 8 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. ஆசியாவின் அதிக குடிசை பகுதிகளை கொண்ட தாராவியில் கொரோனா தொற்று ஏற்ற இறக்கமாக உள்ளது. சில நாட்களாக குறைந்த பாதிப்பு, கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தாராவியில் கொரோனா பாதிப்பு ஏப்ரல் மற்றும் மே மாதத்தை விட ஜூனில் பாதிப்பு 1.02 சதவீதமாக இருந்ததது.
தற்போது ஜூலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் தாராவியில் இன்று புதிதாக 8 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. இதனால் தாராவியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,309 ஆக அதிகரித்தது. தாராவியில் இன்று வரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 84-ஆக உள்ளது. தாராவியில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 551 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,674 ஆகவும் உள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Mumbai Corona: State Health Department Information 8 ,Mumbai Corona: State Health Department Information , Mumbai, Tarawi, Corona, State Health Department
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...