கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் மூலம் நல்ல பலன் .. 600 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ முகாம் அமைக்க ஏற்பாடு : மாநகராட்சி ஆணையர்!!

சென்னை :  கொரோனாவில் இருந்து குணமடைந்து, வீடு திரும்புவோருக்கு பரிசோதனை மேற்கொள்வதில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவ முகாமில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 30 பேரிடம் மனநிலையை கேட்டறிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐசிஎம்ஆர் வழிமுறைகளின்படியே  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றார்.சென்னையில் சுமார் 12 ஆயிரம் பேர் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். உடல் ரீதியான குறைபாடுகள் உள்ளவர்கள், மருத்துவ முகாமுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

சித்த மருத்துவத்தோடு, மருத்துவர்களின் அறிவுரைகளும் இணைந்து செயல்படும்போது நல்ல முடிவை தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் 600 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ முகாம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு 14 நாட்கள் வரை எந்த அறிகுறியும் காணப்படாததால், அவர்களை டிஸ்சார்ஜ் என அறிவிக்கிறோம் என்றும், இதன் காரணமாகவே  டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார்.மேலும் இ-பாஸ் என்பது எல்லோருக்கும் வழங்க முடியாத சூழல் தற்போது உள்ளது. அதனால் சில கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. அவசியம் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Related Stories: