மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!!

டெல்லி: மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பிரதமருக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். இடஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அந்த கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக, நிகழாண்டு மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து பரிந்துரைகள தரும்படி, தேசிய தேர்வு முகமையிடம் மநேற்று த்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரைகளை கேட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும்  மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

2017ம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவு மாணவர்கள் 11 ஆயிரம் இடங்களை இழந்துள்ளனர். உயர் கல்வியி்ல் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிரானது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு என தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில் இடம் கிடைப்பதில்லை. எனவே அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: