தமிழ்நாட்டில் சமூகப்பரவல் இல்லை என கூறி அமைச்சரும், முதலமைச்சரும் விஞ்ஞானிகளை போல் பேட்டி அளித்து காலத்தை வீணடிக்கின்றனர் : மு.க. ஸ்டாலின் தாக்கு!!

சென்னை : கொரோனா பரவல் தடுப்பில் எல்லாமே முறையாக செய்யப்படுவதாகக் ஒரு மணல் கோட்டையை கட்ட இனியும் தமிழக அரசு நினைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை, தற்போது கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனா நோய் பரவல் குறித்த 32 தகவல்களை அளிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்களை அளிக்க மாவட்டச் செயலாளர்களை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை போன்ற நிலை, பிற மாவட்டங்களிலும் ஏற்பட்டால், மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சமூகப்பரவல் இல்லை என கூறி அமைச்சரும் முதலமைச்சரும் மருத்துவ விஞ்ஞானிகளை போல் பேட்டி அளித்து காலத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். நோய் தொற்று நிபுணர்களை கொண்டு, குழுவை அமைக்காமல், சமூக பரவல் இல்லை எனக் கூறி மக்களை அபாயத்தில் தள்ளி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் கிறிஸ்துவ முன்னாள் பேராசிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உண்மையான அக்கரையுடன் கவனிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.  

Related Stories: