×

ஒரே மாதத்திற்குள் 3வது கிரகணம் : வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலையில் நிகழ்கிறது 'இடி சந்திர கிரகணம்'!!

சென்னை : ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமை  ‘இடி சந்திர கிரகணம்’ (Thunder Moon Eclipse) நிகழ உள்ளது.ஒரு மாதத்திற்குள் மூன்று கிரகண நிகழ்வு இதுவாகும். சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 5ம் தேதி சந்திர கிரகண நிகழ்வு (ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்) நடந்தது.

ஜூலை 5ம் தேதி பெனும்பிரல் சந்திர கிரகணம்

*சூரியன் - பூமி - சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகை உண்டு.

முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் முழுவதுமாக பூமி மறைக்கக் கூடிய நிகழ்வாகும்.

பகுதி சந்திர கிரகணத்தின் போது பூமியின் ஒரு பகுதி சந்திரனை மறைக்கக் கூடிய நிகழ்வாகும்.

பெனும்பிரல் சந்திர கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாகத் தெரிகிறது.

வருகிற 5ம் தேதி நிகழ இருக்கும் பெனும்பிரல் கிரகணம், இந்திய நேரப்படி காலை 8.37 முதல் 11.22 வரை நீடிக்கிறது. மொத்தம் 2 மணி நேரம் 45 நிமிடம் நீடிக்கும்.

5-ம்தேதி நடைபெற இருக்கும் இந்த சந்திர கிரகணத்தை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம் என்கிறனர் வானியல் அறிஞர்கள். பகல் பொழுதில் இந்த கிரகணம் ஏற்படுவதால், இந்தியாவில் இதைக் காணமுடியாது.

இடி சந்திர கிரகணம்

எந்த மாதத்தில் வரக்கூடிய சந்திர கிரகணத்தை வைத்து ஒவ்வொரு பெயர் கூறப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் வரக்கூடிய சந்திர கிரகணத்திற்கு தண்டர் மூன் என அழைக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் ‘பக் மூன்’, ‘ஹே மூன்’ என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் ‘பக் எனும் ஆண் மான்’ ஜூலை மாதத்தில் தான் தன்னுடைய கொம்புகளை இழக்கக் கூடியது. மீண்டும் அது வளரும். இதன் காரணமாக தான் ஜூன் மாதத்தில் வரக்கூடிய சந்திர கிரகணத்திற்கு பக் மூன் என்றும், கோடைக்காலத்தில் இடி மின்னலுடன் வரக்கூடிய புயல் மழை வருவதால் இதற்கு தண்டர் மூன் என அழைக்கப்படுகிறது.


Tags : thunderstorms , Thunder eclipse, penumbral, earth
× RELATED தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும்