கொரோனா தடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு.:அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உணவு வழங்க ரூ. 44.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு போராடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை அரசு மருத்துவமனைகள், முகாம்கள் மற்றும் பல இடங்களில் அரசு தங்கவைத்து அவர்களை கண்காணித்து வருகிறது.

இந்த கண்காணிப்பு பணியில் உள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர மாதம் தோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ. 44.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் உணவுக்காக ரூ.1.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.40.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினருக்கு ரூ. 2.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44.34 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: