திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: கோவில் நிர்வாகம் அதிர்ச்சி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த மார்ச் 19ம் தேதி கொரோனா வைரஸ் பரவலின் காரணமாகத் திருப்பதி கோயிலின் நடை சாத்தப்பட்டு, ஜூன் 5ம் தேதி திறக்கப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து 10 நாட்கள் பணி செய்துவிட்டு, மீண்டும் 10 நாட்கள் விடுப்பிலிருந்து, மறுபடியும் பணிக்குத் திரும்பும் போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இருப்பினும் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட் டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories: