முன்னாள் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு திடீர் நெஞ்சுவலி...! சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சை:  பொன் மாணிக்கவேல் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியாவார். தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்புப்பணி தொடர்பான விசாரணைக்கு இவர் சிறந்தவராக விளங்கினார். இவர் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்கப்பட்டன.  

ஐஜி பொன்.மாணிக்கவேல் 1958-ம் ஆண்டு பிறந்தார். 1989ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாக செயல்பட்டு பாராட்டும் பெற்றுள்ளார்.  சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி), உளவுப்பிரிவு காவல்துறைத் துணைத்தலைவர் (டிஜஜி), சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைத் துணைத்தலைவர் எனப் பல பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

பின்னர், இவர் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றாலும், அவரது சேவை நாட்டுக்குத் தேவை என,  ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், சில மாதங்கள் பணியாற்றி விட்டு அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு திடீரென நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: