போட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கேபரான்: போட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் மொத்தம் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யானைகள் எப்படி உயிரிழந்துள்ளன என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படாத காரணத்தால் இவை வேட்டையாடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இறந்து கிடந்த யானைகள் பெரும்பாலும் முகம் தரையில் படுமாறு குப்புற விழுந்து உயிரிழந்துள்ளன உயிரிழந்துள்ளன. இதனால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சில யானைகள் உடல்நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதாகவும், அவைகளால் தங்கள் பாதைகளை ஏதோ காரணத்தால் மாற்ற முடியவில்லை என சரணாலயத்தை ஆய்வு செய்த விலங்குகள்  நல ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைகாக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதக போட்ஸ்வானா வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்கா இயக்குனர் டாக்டர்.சைரில் தகவல் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகள் அடுத்த சில வாரங்களில் வரலாம் எனவும், அப்போது தான் யானைகளின் மரணம் தொடர்பான உண்மையான காரணம் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: