×

பாஜக மாநில துணை தலைவராக பதவி ஏற்றார் வி.பி.துரைசாமி!!

சென்னை: பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு கட்சியின் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பாஜகவின் மாநில தலைவராக முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னராக கட்சியின் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவது கட்சியின் நடைமுறையாகும்.

அதன்படியாக மாநில துணை தலைவர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த 10 பேரும் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வந்தவர்கள். தொடர்ந்து அந்த 10 பேரில் புதிதாக சேர்க்கப்பட்டவர் வி.பி.துரைசாமி. அதேபோல மத்திய சென்னை எம். சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கே.எஸ். நரேந்திரன், வானதி சீனிவாசன், எம். முருகானந்தம், எம்.என். ராஜா, ஏ.ஆர். மகாலட்சுமி, கோவை கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகிய 10 பேரும் மாநில துணை தலைவர்களாகவும், கே.டி.ராகவன், ஜி.கே. செல்வகுமார், ஆர். சீனிவாசன், கரு. நாகராஜன் ஆகியோர் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்மையில் பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் பால் கனகராஜ்-க்கு மாநில வழக்கறிஞர் அணி தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Thuraisamy ,BJP ,Thurasamy ,state vice president , VP Thurasamy to be sworn in as BJP state vice president
× RELATED பா.ஜ.வில் சேர்கிறார் குஷ்பு?