மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்சிஜன் டேங்க் அமைக்க ஏற்பாடு : கொரோனா சிகிச்சை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கும் கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு செய்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது, தீவிரமாக தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் வாயு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்சிஜன் டேங்க் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கும் கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி சுமார் 34,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. என்றார். மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்று பலர் கேள்வி கேட்கிறார்கள். அப்படி மாறவில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர்-தான் கொரோனா தொற்றின் நிலை குறித்து விளக்கம் அளிக்கும். அந்த அமைப்பு கொடுத்த தகவல்படி, இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறவில்லை என்பது தெரிகிறது,” என்று கூறியுள்ளார்.

Related Stories: