×

2 ரூபாய் மதிப்பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரை.. கொரோனா தொற்றுக்கு நல்ல பலன் தருவதாக தமிழக மருத்துவர் ஆய்வு அறிக்கை!!

சென்னை : கொரோனா தொற்றுக்கு 2 ரூபாய் மதிப்பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு 2 ரூபாய் மதிப்பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான வசந்த குமார் கொரோனா வைரஸை அழிக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, 50 ஆண்டுகால பழமை வாய்ந்த மாத்திரையான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவதாக ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் அது நல்ல பலன் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள மருத்துவர் வசந்த குமார், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  பீட்டா பிளாக்கர்ஸ்மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : 2 rupees, beta blockers, tablet, corona, infection, doctor, study, report
× RELATED புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி