ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 6.25 லட்சத்தை தாண்டியது.. 18,213 பேர் பலி; இன்னும் சில நாளில் ரஷியாவை முந்தும் இந்தியா!!

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.25 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 6,25,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 379 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 3,79,892 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,27,539 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4ம் இடத்தில் உள்ள நிலையில், ரஷியா 6.61 லட்சம் பாதிப்புடன் 3ம் இடத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இந்தியா ரஷியாவை முந்தி மக்களை உச்சகட்ட பீதியில் ஆழ்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,86,626 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,178 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 1,01,172 பேர் குணமடைந்துள்ளனர்.

அதே போல 98,392 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56,021 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,175 தாண்டிய நிலையில், 2,864 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அங்கு 63,007 பேர் கொரோனாவால் இருந்து மீண்டுள்ளனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் - 109

ஆந்திர பிரதேசம் - 16097

அருணாச்சல பிரதேசம் - 195

அசாம் - 9013

பீகார் - 10471

சண்டிகர் -450

சத்தீஸ்கர் - 3013

தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 230

டெல்லி - 92175

கோவா - 1482

குஜராத் - 33913

அரியானா - 15509

இமாச்சல பிரதேசம் - 1014

ஜம்மு - காஷ்மீர்- 7849

ஜார்க்கண்ட் - 2584

கர்நாடகா - 18016

கேரளா -4753

லடாக் - 990

மத்திய பிரதேசம் - 14106

மகாராஷ்டிரா - 186626

மணிப்பூர் - 1279

மேகாலயா - 56

மிசோரம் - 162

நாகலாந்து - 501

ஒடிசா - 7545

புதுச்சேரி - 802

பஞ்சாப் - 5784

ராஜஸ்தான் - 18662

சிக்கிம் - 102

தமிழ்நாடு - 98392

தெலுங்கானா - 18570

திரிபுரா - 1435

உத்தரகாண்ட் - 2984

உத்தர பிரதேசம் - 24825

மேற்கு வங்காளம் - 19819

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-6031

மொத்தம் - 625544

Related Stories: