×

மொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி: ஆவடி, புதிய ராணுவ சாலை மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாலிபர் மொபட்டை தள்ளிக்கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, போலீசார் அவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால்  மொபட்டின் சீட்டை தூக்கி சோதனை செய்தனர். அப்போது உள்ளே ஒரு பெரிய பொட்டலம் இருந்தது தெரிய வந்தது.  அதனை போலீசார் பிரித்து பார்த்த போது கஞ்சா என தெரிந்தது.

அதில் 1.150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது போலீசார் அவனிடம் இருந்து கஞ்சா, மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் விசாரித்ததில் அவர், அயனாவரம், கூத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அரவிந்த் (18) என்பதும், அண்ணாநகரில் தனியார் கல்லூரியில் பி.காம், 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், இவர் பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி அயனாவரம் செல்வதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

Tags : College student ,Kidnapping , College student arrested for kidnapping
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல்...