டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை

பூந்தமல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பூந்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை அள்ளி சென்றது தெரியவந்தது. இதில், எவ்வளவு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: