×

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வந்தவாசியைச் சேர்ந்த வினாயகம்  (42) என்பவர் சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் உள்ளூர் தனியார் கிளினிக் மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இன்னொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். காய்ச்சல் குறையாத நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கொரோனா ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நோய் முற்றியிருந்ததால் சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார்.

உள்ளூர், தனியார் மருத்துவமனைக்கு சென்றபோதே கொரோனா சோதனை செய்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும். காய்ச்சல் என்பது கொரோனா வைரசுக்கான அறிகுறி என்பதால், காய்ச்சலுடன் ஒருவர் எந்த மருத்துவமனைக்கு வந்தாலும், அவருக்கு கொரோனா ஆய்வு செய்வதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும்.இதுதொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகளுக்கும் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் உரிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும்.

Tags : examination ,Ramadas , Fever Syndrome, Coronal Examination, Mandatory, Ramadas
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...