மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபர் புடின் 2036ம் ஆண்டு வரை பதவியில் நீட்டிப்பதற்கு 78 சதவீத பொதுமக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.ரஷ்யாவில் தொடர்ந்து இரு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக நீடிக்க முடியாது. தற்போதைய ரஷ்ய அதிபர் புடின் 2008ல் பதவியேற்று, 2 முறை அதிபராக இருந்துள்ளார். அவரது பதவிக்காலம் 2024ல் முடிவடைகிறது. அதன் பிறகும் அவர் தேர்தலே இல்லாமல் அதிபர் பதவியில் நீடிப்பதற்காக, அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த ஓட்டெடுப்பில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணி முடிக்கப்பட்டன. இதில், 77.9 சதவீதம் பேர் ரஷ்ய அதிபர் பதவியை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதனால், 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புடின் தொடர இனி எந்த சிக்கலும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.