×

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை

பூந்தமல்லி: பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார் சோதனை செய்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை அள்ளி சென்றது தெரியவந்தது. இதில், எவ்வளவு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Task, shop, robbery
× RELATED டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை