×

அடிப்படை தொண்டனாக பணியாற்றி காங்.கை ஆட்சிக்கு கொண்டு வருவேன்: கர்நாடக தலைவர் டி.கே.சிவகுமார் சூளுரை

பெங்களூரு: ‘கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவராக இன்றி அடிப்படை தொண்டனாக பணியாற்றி கட்சியை  மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன்,’ என டிகே சிவகுமார் சூளுரைத்தார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக டிகே சிவகுமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பெங்களூரு குயின்ஸ் ரோடு அக்கட்சியின் புதிய கட்டிடத்தில் நடந்த விழாவில் மாஜி தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைவர் பொறுப்பை டிகே சிவகுமாரிடம் ஒப்படைத்தார். காங்கிரஸ் கொடியை பெற்ற பிறகு டிகே சிவகுமார் பேசியதாவது: கட்சியின் தலைமை எனக்கு அளித்த பணிகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி வந்துள்ளேன்.

தற்போது அதைப்பற்றி கூறுவதை விட கட்சியின் தேசிய தலைவர் சோனியா என் மீது நம்பிக்கை வைத்து மாநில தலைவர் பதவி அளித்துள்ளார். மத்திய, மாநில பாஜ என் மீது, வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ என பல்வேறு இடையூறுகளை ஏவியது. தனிப்பட்ட முறையில் அதை எதிர்த்த நிலையில் திகார் சிறையில் சோனியா என்னை சந்தித்து 1 மணி நேரம் பேசினார். சோனியா காந்தி கூறிய வார்த்தைகள் எனக்கு மிகவும் பலமாக மாறிய நிலையில் மாநில தலைவராக பதவியேற்க வேண்டும் என்றும் கூறினார். கனகபுரா பண்டே (பாறை) என என்னை அழைக்கிறார்கள். பாறையில் உளி மோதினால் அது நடைபாதை கற்கள், தூண்கள் மற்றும் சிலைகளாக மாறுகின்றன. எனவே, பாறையாக இருப்பதை விட விதானசவுதாவின் படிக்கற்களாக மாறி கட்சியை மறுபடியும் ஆட்சிக்கு கொண்டு வருவதே என்னுடைய ஒரே நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DKC Sivakumar Sulurai ,Karnataka ,base volunteer , Cong., Karnataka President DK Sivakumar
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!