கொரோனா பரவல் எதிரொலி: திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை!

திருவண்ணாமலை: கொரோனா பரவல் எதிரொலியால் திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 31.07.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பௌர்ணமி நாளான 04.07.220 மற்றும் 05.07.2020 ஆகிய நாட்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் மற்றும் மேற்படி பௌர்ணமி நாளன்று அண்ணாமலையார் மலையினை சுற்றி கிரிவலம் செலவும் தடை விதிக்கப்படுகிறது.

எனவே பக்தர்கள்/பொதுமக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செலவதற்கு வருகைபுரிய வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடியுள்ளன. கோயிலை திறக்காததால் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே 3 மாதங்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், 4வது மாதமாக தற்போதும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: