×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்நிலைய வாகன ஓட்டுநர் ஜெயசேகரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை..!

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் ஜெயசேகர் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். அவரிடம் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகிறது. சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 22ம் தேதி கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உள்ளாகிய இச்சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் 6வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். இன்று காலையிலிருந்து நடைபெறும் விசாரணையில் முதலாவதாக சாத்தன்குளம் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்ஸ் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது திருச்செந்தூர் அரசினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் ஜெயசேகர் ஆஜராகியுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Bharathidasan ,Jayasekar ,Jayasekera ,murder ,investigation , Sathankulam, father and son murder, magistrate, investigation
× RELATED வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில்...