3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு...! தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

சென்னை : கொரோனா காரணமாக 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் சார்லஸ் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும் வருமானமில்லாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வீட்டு வாடகை, இ.எம்.ஐ உள்ளிட்ட உள்ளிட்ட மாத செலவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது.

தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அலெக்ஸாண்டர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அப்போது ஊரடங்கு காலத்தில் பலர் சென்னையை விட்டு சென்று விடுவதாகவும், தற்போது  வீட்டு உரிமையாளர்கள் முழுமையாக வீட்டு வாடகை வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று வாரங்களுக்கு வாடகை வசூலிக்க கூடாது என்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்ததுபோது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதனையடுத்து, இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: