நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை முழு கடையடைப்பு: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு..!!

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை முழு கடையடைப்பு என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நெய்வேலியில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் நேற்று காலை திடீரென்று பாய்லர் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிறு காயங்களுடன் இருந்த ஒருவருக்கு என்.எல்.சி., மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிய என்.டி.பி.சி நிறுவனத்தின் முன்னாள் தொழில் நுட்ப இயக்குனர் வி.கே.மோகபத்ரா தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி.,யின் மின்சார இயக்குனர் தலைமையில் நிறுவன அளவிலான ஒரு குழுவும் அமைத்து விசாரணை துவங்கியுள்ளது.

இதையடுத்து 2ம் அனல் நிலையத்தின் தலைமை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடக்க உள்ளது. மேலும் 2-வது அனல் மின் நிலையம் இரண்டாவது கட்டத்தில் உள்ள நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது யூனிட்டுகள் தற்காலிகமாக முழு பாதுகாப்பு தணிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நெய்வேலியில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: