×

மருத்துவ படிப்பில் OBC-க்கு 50% இட ஒதுக்கீடு; சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடுக...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா? இல்லை மறுப்பு தெரிவிக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.


Tags : Supreme Court ,Chennai ,Tamil Nadu ,Madras High Court , 50% reservation for OBC in clinical study; Order to immediately hear the case against the Madras High Court ...
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...