வழக்கு விசாரணையில் போலீஸ் நண்பர்கள் குழு தலையிடக் கூடாது, வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை : தென்மண்டல ஐஜி முருகன்

சென்னை :சிபிசிஐடிக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்று தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐஜி முருகன், லாக் அப் மரணங்கள் நடைபெற கூடாது என்பதே காவல்துறையின் விருப்பம். தொடர் பயிற்சியின் மூலம் லாக் அப் மரணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு காவல்துறையின் எந்த அதிகாரமும் இல்லை. வழக்கு விசாரணையில் போலீஸ் நண்பர்கள் குழு தலையிடக் கூடாது.காவலர்கள் நண்பர்கள் குழுவினர் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது. சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒருமாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. என்றார்.

Related Stories: