மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!!!

நேபிடா:  மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, அந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் ஒன்று செய்யப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்கு முன்னர், ஒரு வார காலமாகவே அங்கு அதிகளவு கனமழையானது பெய்து வந்துள்ளது. இந்நிலையில், ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் குவியல் குவியலாக விழுந்து அவர்களை குழிக்குள் அமுக்கியதுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலச்சரிவில் இதுவரை மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: