×

தொடர்ந்து பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது; இதுவரை 17,834 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,85,493-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 434 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 17,834 பேர் உயிரிழந்த நிலையில் 3,59,860 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,80,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8053 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 93,154 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 94,049 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,264 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 52,926 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 89,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,803 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 59,992 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 8582 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 5,851 பேர் குணமடைந்தது.
பீகாரில் 10,249 பேருக்கு பாதிப்பு; 70 பேர் பலி; 7,946 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 446 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 367 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 2,940 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,303 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,387 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 670 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 33,232 பேருக்கு பாதிப்பு; 1867 பேர் பலி; 24,030 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 14,941 பேருக்கு பாதிப்பு; 240 பேர் பலி; 10,499 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,396 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,093 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 4,593 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 2,439 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 18,312 பேருக்கு பாதிப்பு; 421 பேர் பலி; 14,574 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,521 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 1,931 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 990 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 694 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,260 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 579 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 52 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 160 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 123 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 459 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 168 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 7316 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 5353 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 714 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 272 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 5,668 பேருக்கு பாதிப்பு; 149 பேர் பலி; 3,867 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2947 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 2,317 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 16,514 பேருக்கு பாதிப்பு; 253 பேர் பலி; 8063 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 7,695 பேருக்கு பாதிப்பு; 105 பேர் பலி; 4,856 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 17,357 பேருக்கு பாதிப்பு; 267 பேர் பலி; 8082 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 19,170 பேருக்கு பாதிப்பு; 683 பேர் பலி; 12,528 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 24,056 பேருக்கு பாதிப்பு; 718 பேர் பலி; 16,629 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 15,252 பேருக்கு பாதிப்பு; 193 பேர் பலி; 6,988 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 195 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 66 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 13,861 பேருக்கு பாதிப்பு; 581 பேர் பலி; 10,655 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 979 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 614 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 100 பேருக்கு பாதிப்பு; 50 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
தாதர் நகர் ஹவேலியில் 215 பேருக்கு பாதிப்பு; 86 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 101 பேருக்கு பாதிப்பு; 53 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : Maharashtra ,India ,Nadia , Maharashtra tops the list; The number of victims of coronavirus in Nadia exceeded six lakhs; So far, 17,834 people have been killed
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...