இன்றுடன் 4-வது நாளாக மாற்றமில்லை; சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.72-க்கும் விற்பனை..!!

சென்னை; கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாத நிலையில் இன்றும் விலை மாற்றமாகவில்லை. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும்  மாற்றி அமைத்து  வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.    அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத்    தொடங்கியுள்ளது.

இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 7-ம் தேதியில் இருந்து நேற்றுமுன்தினம் வரை 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தது.   இருப்பினும், கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சென்னையில்   இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.72-க்கும் விற்கப்படுகிறது.

கடந்த 7-ம் தேதி முதல் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.8.09ம், டீசல் ரூ.9.50ம் உயர்ந்துள்ளது. இன்றுடன் 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டாலும் இம்மாத இறுதிக்குள் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ  கடக்கும் எனவும் கூறப்படுகிறது.

சென்னையில் இதுவரை இன்று பெட்ரோல் டீசல் விலை

தேதி    பெட்ரோல்    உயர்வு    டீசல்    உயர்வு

7         76.07         53 காசு    68.74    52 காசு

8         76.6          53 காசு    69.25    51 காசு

9         77.08         48 காசு    69.74    49 காசு

10        77.43         35 காசு    70.13    39 காசு

11        77.96         53 காசு    70.64    51 காசு

12        78.47         51 காசு    71.14    50 காசு

13        78.99         52 காசு    71.64    50 காசு

14        79.53         54 காசு    72.18    54 காசு

15        79.96         43 காசு    72.69    51 காசு

16        80.37         41 காசு    73.17    48 காசு

17        80.86         49 காசு    73.69    52 காசு

18        81.32         46 காசு    74.23    54 காசு

19        81.82         50 காசு    74.77    54 காசு

20        82.27         45 காசு    75.29    52 காசு

21        82.58         31 காசு    75.80    51 காசு

22        82.87         29 காசு    76.30    29 காசு

23        83.04         17 காசு    76.77    47 காசு

24        83.04         17 காசு    76.77    47 காசு

25        83.18         14 காசு    77.29    52 காசு

26        83.37         19 காசு    77.44    15 காசு

27        83.59         22 காசு    77.61    17 காசு

28        83.59         00 காசு    77.61    00 காசு

29        83.63         04 காசு    77.72    11 காசு

30        83.63         00 காசு    77.72    00 காசு

01        83.63         00 காசு    77.72    00 காசு

02        83.63         00 காசு    77.72    00 காசு

Related Stories: