சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ரகுகணேஷை நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி மாவட்ட  முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எஸ்.ஐ. ரகுகணேஷ் வரும் 16-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த மாவட்ட  முதன்மை நீதிபதி ஆணையிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவை அடுத்து ரகுகணேஷ் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: