ஒரே நாளில் சவரன் ரூ.424 அதிகரிப்பு

சென்னை: நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் மூடப்பட்டன. அதற்கு முந்தைய நாளான மார்ச் 23ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,952க்கும், சவரன் ரூ.31,616க்கும் விற்கப்பட்டது. கடைகள் அடைப்பால் மார்ச் 24ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை தங்கம் விலை வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி  தங்கம் வரலாற்றில் புதிய சாதனையாக, ஒரு கிராம் தங்கம் ரூ.4,659க்கும், சவரன் ரூ.37,272க்கும் விற்கப்பட்டது. 27ம் தேதி கிராம் ரூ.4640க்கும், சவரன் ரூ.37,120க்கும், 29ம் தேதி சவரன் ரூ.36,992க்கும் தங்கம் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,631க்கும், சவரன் ரூ.37,048க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.53 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,684க்கும், சவரனுக்கு ரூ.424 அதிகரித்து, சவரன் ரூ.37,472க்கும் விற்பனையானது. இது, தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்சமாகும். இதன் விலை ரூ.38,000ஐ நெருங்கி வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: