×

71வது பிறந்தநாள் துணை ஜனாதிபதிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 71வது பிறந்த நாளுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘‘தங்களின் பிறந்தநாள் இந்திய மக்களுக்கு பெருமை சேர்க்கும் நாளாகும். நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஜனாதிபதி பதவியை சிறந்த கல்வியாளர், சிறந்த அரசியல்வாதியான நீங்கள் அலங்கரிப்பது பெருமைக்குரியதாகும். நம் மக்களின் பிரச்னைகள், உரிமைகள் தொடர்பாக உங்களின் மாணவ பருவத்திலிருந்தே அறிந்தவர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. இந்த மகிழ்ச்சியான நாளில் தமிழக மக்கள் சார்பிலும், அதிமுக சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பணிக்காக பிரார்த்தனை செய்யும் லட்சக்கணக்கானோருடன் இணைந்து வாழ்த்து தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags : Vice President ,O. Banerselvam ,birthday , Congratulations to O. Banerselvam for his 71st birthday
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!