×

ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட சீன தேசிய பாதுகாப்பு சட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது: முதல் நபராக போராட்டக்காரர் கைது

வாஷிங்டன்: ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமாகி உள்ளது. ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என சீனா அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இந்த சட்ட மசோதா கடந்த மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம், ஹாங்காங்கின் சுயாட்சியை அழிக்கும் நடவடிக்கையாகும்.

இது, சீனாவின் சாதனைகளில் மிகப்பெரிய ஒன்று. சுதந்திரத்தை விரும்பும் ஹாங்காங் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தரும். சீனா தனது சர்வாதிகாரம் என்ற தொப்பைக்குள் ஹாங்காங்கை விழுங்குவதை அமெரிக் கா வேடிக்கை பார்க்காது. ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் துன்பம் மிகுந்த நாளாகும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த சட்ட்த்தை கண்டித்து ஹாங்காங்கில் போராட்டம் வெடித்துள்ளது. அதில் ஈடுபட்ட ஒருவரை இந்த புதிய சட்டத்தின் கீழ் முதல் முறையாக போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், மேலும் பலரை கைது செய்தனர்.

Tags : Chinese ,Hong Kong , Hong Kong, Chinese National Security Act, Amal, first-person protestor, arrested
× RELATED மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன...