மருத்துவமனையில் சிலிண்டர் வெடித்து 19 பேர் பலி

டெஹ்ரான்: ஈரானில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 19 பேர் உயிரிழந்தனர். ஈரானின் வடக்கு டெஹ்ரான் பகுதியில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் நேற்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் ஜலால் மாலேகி, சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 15 பெண்கள், 4 ஆண்கள் இறந்ததாகவும் 20 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவமனையில் இருந்து சிலிண்டர் வெடித்து கரும்புகை வெளியேறும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. டெஹ்ரான் துணை ஆளுநர் ஹமீத்ரேசா கவுதார்சி கூறுகையில், “மருத்துவ எரிவாயு டேங்கில் ஏற்பட்ட கசிவே சிலிண்டர் வெடித்ததற்கு காரணம்,” என்றார்.

Related Stories: