×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி அதிரடி: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை,மகன் மரண வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளது. ஊரடங்கை மீறியதாக கைதான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணையின் பேரில் நடத்திய கொடுமையில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் போதியஆதாரங்களை திரட்டி சி.பி.சி.ஐ.டி  அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கின் முக்கிய நபரான எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் எஸ்.ஐ. பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஊரடங்கை மீறியதாக கைதான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தனர். உடல்நலக்குறைவால் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் கூறிய நிலையில் சித்ரவதை செய்து அடித்து கொன்றது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர், வணிகர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கணும் என்ற கோட்பாட்டில் அவர் சாட்சியம் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், தற்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அதில் முக்கிய நபரான எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்துள்ளனர். மேலும் எஸ்.ஐ. பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : CBCID Action In Sattankulam Father And Son Murder Case Raghukanesh ,police officers ,Sathankulam ,CBCID , Sathankulam, death case, police officers, murder case
× RELATED பஸ் மீது லாரி மோதி விபத்து 4 பெண் போலீஸ் உள்பட 18 பேர் படுகாயம்