×

ஈரானில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறி விபத்து: 19 பேர் பரிதாப உயிரிழப்பு!!!

தெக்ரான்: ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள மருத்துவமனையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிவிபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்து கரும்புகை சூழ்ந்தது. இந்த கோரசம்பவத்தில் முதலில் 13 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் தெஹ்ரான் தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜலால் மாலேகி பின்னர் மாநில தொலைக்காட்சிக்கு இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களில் 15 பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் இருக்கலாம் என அரசு நடத்தும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது. மேலும், தீயணைப்பு வீரர்கள் 20 பேரை மீட்டதாக மாலேகி கூறினார். இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ள பலர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மருத்துவமனையில் பலர் சிக்கியிருக்க கூடும் என்பதால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்க்குகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால் அவை தொடர்ந்து வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags : Iran , Iran, hospital, oxygen tank explodes, accident
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...