கொரோனாவால் தடைபட்ட டெமோசிஸ்டோ போராட்டம்: பல நாடுகளின் எதிர்ப்பை மீறி சீனாவில் ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம்...!!

ஹாங்காங்: ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து, சீனாவுக்கு எதிராக இதுவரை போராடி வந்தோர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆசிய நாடான ஹாங்காங், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997ம் ஆண்டு  சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு, இரண்டு நடைமுறை என்ற அடிப்படையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங்குக்கு தனி நிர்வாகம் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.  

இந்நிலையில் சீனாவின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட பகுதி ஹாங்காங். இங்கு சீனாவின் சட்டத்தை எதிர்த்து டெமோசிஸ்டோ என்ற பெயரில்போராட்டம் நடந்து வந்தது. கொரோனாவால் நடுவில் இந்த போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் போராட்டம் தொடங்கிது. ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு சீனாவுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை கலைத்தனர். இதனையடுத்து போலீசார் தெரிவித்தாவது: ஊரடங்கு காரணமாக 8 பேருக்கு மேல் ஒன்று கூட அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, சீனா அரசு, முறையாக எதுவும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற, ஹாங்காங்குக்கான ஒரே பிரதிநிதியான, டாம் யுசுங்க், இதை உறுதிபடுத்தியுள்ளார். இந்த கூட்டம் சீனாவில் நடந்து வந்த நிலையில், ஹாங்காங்கில் பல இடங்களில், நேற்று இந்த போராட்டங்கள் நடந்தன. மேலும் சட்டம் நிறைவேறிய நிலையில் ஜனநாயக ஆதரவு போராட்டக் குழுவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் இருந்து விலகினர். அதே நேரத்தில், ஒரு சிலர் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Related Stories: