1 லட்சம் நெருங்குகிறது கொரோனா பாதிப்பு.. சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் 22-வது இடத்தை பிடித்தது தமிழகம் : உச்சக்கட்ட பீதியில் மக்கள்!!

சென்னை: கொரோனா பாதிப்பில் உலக அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி 22-வது இடத்தை தமிழகம் பிடித்து இருப்பது தமிழக மக்களை உச்சகட்ட அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

*தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

*இந்நிலையில் தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக 3,943 பேருக்கும், சென்னையில் 2,393 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.சென்னை தொற்று எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் நேற்று மட்டும் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1201 ஆக உயர்ந்துள்ளது.

*சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் முதன்முறையாக காலூன்றிய கொரோனா உயிர்க்கொல்லியால், அங்கு இதுவரை 4,634 பேர் உயிரிழந்த நிலையில், 83, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் பட்டியலில் சீனா 22ம் இடத்தில் உள்ளது,

*தற்போதைய நிலவரப்படி, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக இருக்கும் பட்சத்தில், சீனாவை  தமிழகம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

* உலக அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி 22-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

*அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒன்றரை லட்சத்தைக் கடந்துவிட்டது. உலக அளவில் 16-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் 5.85 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: