×

13 ஆயிரம் வழக்குகள் பதிவு: வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பல்வேறு கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இன்று வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வேளையில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 13,738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, 12,885 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 9758 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 6,925 வாகனங்கள் உரிய அபராதம் செலுத்தியதை தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

Tags : 13 thousand, cases ,registered, Vehicles seized
× RELATED சாலையில் வாகனங்களை நிறுத்துவதால்