×

வாடாதவூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ₹20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திமுக எம்எல்ஏ, எம்பி திறந்து வைத்தனர். உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனாலும், கோடைகாலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொது மக்கள் தவித்து வந்தனர்.

இதையடுத்து, இந்த கிராமத்துக்கு, மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ₹20 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பாபு வரவேற்றார். க.சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை திறந்து வைத்தனர்.

Tags : Vadadavur village , Opening ,overhead, reservoir tank, Vadadavur village
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்