மக்களை காக்க வேண்டிய முதல்வரே செயலற்று இருப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை :   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை ஐபிசி 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா? இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: