×

உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 19,459 பேருக்கு தொற்று

புதுடெல்லி: நாட்டில் ஒரே நாளில் 19459 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 380 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஆறாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டேரின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கொரோனா நோய் தொற்று விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 3,57,783 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,10,120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,21,722பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 58.67 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக 380 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 156 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 65, தமிழகத்தில் 54, குஜராத்தில் 19, கர்நாடகாவில் 16, ஆந்திராவில் 12, உத்தரப் பிரதேசத்தில் 11, மேற்கு வங்கத்தில் 10, ராஜஸ்தான் 8, மத்தியப் பிரதேசம் 7, அரியானா மற்றும் பஞ்சாபில் தலா 5, தெலங்கானாவில் 4, ஒடிசாவில் 3, ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், கோவா, உத்தரகாண்ட் மற்றும் பீகாரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி, 28ம் தேதி வரை 83,98,362 பேருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு அன்று மட்டும் 1,70,560 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : rising coronavirus, infected, 19,459 people,single day
× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி