×

தெலங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா

திருமலை: தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமத் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. கடந்த 2 தினங்களாக முகமத் அலி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஆஸ்துமா இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு  அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

இதையடுத்து அமைச்சருடன் இருந்த அதிகாரிகள் மற்றும் அவரது உறவினர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அமைச்சர் வசிக்கும் வீடு மற்றும் அலுவலகத்தை சுற்றி நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தனர்.Tags : Home Minister ,Telangana ,Corona , Corona,Telangana, Home Minister
× RELATED 7.5 % உள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய...