×

மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 38 போலீசாருக்கு கொரோனா

* பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,129 ஆக உயர்வு

சென்னை :  சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட மாநகரம் முழுவதும் 38 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, 38 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இவர்களுடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை காவல்துறையில் நேற்று வரை 1,129 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 9 பேர் உட்பட,  இதுவரை 444 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

Tags : Corona ,Central Criminal Inspector ,Inlcuding Criminal Criminal Inspector ,Chennai , corona,Chennai Police,tested positive
× RELATED மீண்டும் துவங்கியது `பரேடு’ கொரோனா அச்சத்தில் மதுரை போலீசார்