×

கால்பந்து போட்டிக்கு சாதகமான சூழல் இல்லை... இந்திய கால்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலர் குஷால் தாஸ்.

கால்பந்து  உடல் தொடர்புள்ள விளையாட்டு. கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தின் உத்தரவுகளை மிக நெருக்கமாக பின்பற்றி வருகிறோம். போட்டிகளை மீண்டும் எப்படி தொடங்குவது என்பது குறித்து பங்குதாரர்களிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடங்கினோம். அரசாங்கத்தின்  வழிகாட்டு நெறிமுறைகளுடன், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வகுந்துள்ள நெறிமுறைகளையும் ஆராய்ந்து, பயிற்சிக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை இந்திய விளையாட்டுஅமைச்சகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் கலந்தாலோசிப்போம்.

ஐஎஸ்எல், ஐ-லீக் என எந்த போட்டியாக இருந்தாலும் சூழ்நிலைதான் எதையும் முடிவு செய்யும். கத்தார் அணியுடனான உலக கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியை அக்டோபரில் நடத்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காவிட்டால் அதுவும் சாத்தியமில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரின் பாதுகாப்பும், உயிரும் அதிமுக்கியமானது. எனவே சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், இப்போது போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை.

Tags : Kushal Das ,Indian Football Federation , Football bout, favorable environment, Indian Football Federation, General Secretary Kushal Das.
× RELATED தமிழகத்தில் கொரோனா சூழல் குறித்து...