சில்லி பாயின்ட்

* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இங்கிலாந்துடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மயர் விலகி உள்ளார். இதற்கு முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* குல்தீப் யாதவ் தனது பந்துவீச்சில் மேலும் பலவிதமான யுக்திகளை சேர்த்து மெருகேற்ற வேண்டும் என்று முன்னாள் ஸ்பின்னர் சிவராமகிருஷ்ணன் ஆலோசனை கூறியுள்ளார்.

* ஊரடங்கு காலத்தில் மனரீதியாக சோர்வடைந்த எங்களுக்கு மூத்த வீராங்கனைகள் ஆதரவாக இருந்தது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்று ஹாக்கி வீராங்கனை லால் ரேம்சியாமி தெரிவித்துள்ளார்.

* இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் லெக்சி அணியை வீழ்த்தியது.

* ஒடிஷா எப்சி அணியின் துணை பயிற்சியாளராக ஜெர்ரி பெய்டன் (64 வயது, அயர்லாந்து) 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* முன்னாள் தடகள நட்சத்திரம் பி.டி.உஷா நேற்று தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* வில்வித்தை நட்சத்திரங்கள் தீபிகா குமாரி  அடானு தாஸ் திருமணம் கொல்கத்தாவில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ரியல் வல்லடோலிட் அணியுடன் மோதிய செவில்லா எப்சி அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

Related Stories: