×

இதுவரை 8 பேர் சாவு: கொரோனா நோயாளிகள் தற்கொலையை தடுக்க சிசிடிவி கேமரா

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிலர் அச்சம் மற்றும் மன அழுத்தம் காரணமாக கொரோனா வார்டுகளில் இருந்து தப்பி ஓடுவதும், சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், 4 அரசு மருத்துவமனைகளில் இதுவரை 8க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கழிவறை மற்றும் அவர்களின் அறைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கொரோனா பாதுகாப்பு மையங்களில் நோயாளிகள் அறை கதவுகளில் உள்ள உள்புற தாழ்ப்பாள்கள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை சூளையில் புதிதாக கட்டப்பட்ட கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 800க்கும் மேற்பட்ட வீடுகளை கொரோனா தனிமை மையங்களாக சென்னை மாநகராட்சி மாற்றியுள்ளது. இந்த மையத்தில் உள்ள அறைகளின் கதவுகளில் தாழ்ப்பாள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் தப்பி ஓடுவதை தடுக்க அனைத்து மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகள் தப்பி ஓடுவதை தடுக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : suicide ,Corona , Death, Corona patients, suicide, CCTV camera
× RELATED குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62...