யோகா தினம்!

சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ள அவர், ‘யோகா என்பது இந்தியாவின் பாரம்பரிய பொக்கிஷம். ஆனால், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் ஐ.நா. அறிவித்தபடி ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகமே கொண்டாடுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அனைவரையும் முடக்கியிருக்கும் இந்த காலத்தில் யோகா இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. அனைவருக்கும் யோகா தின நல்வாழ்த்துக்கள்… என்று தகவல் பதிந்துள்ளார். அமைச்சரின் யோகா வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories:

>