×

வைரல் சம்பவம்

நன்றி குங்குமம் முத்தாரம்

சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த காட்டுத்தீயில் ஏராளமான கோலா கரடிகள் உயிரிழந்தன. உயிருக்குப் போராடிய கோலா கரடிகளின் புகைப்படங்கள் வெளியாக பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. காட்டுத்தீக்குப் பிறகு இப்போதுதான் முதல் கோலா கரடி பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான நிகழ்வை வீடியோவாக்கி இணையத்தில் பகிர்ந்துள்ளது ஆஸ்திரேலியன் பார்க். கோலா கரடியின் பிறப்பு நம்பிக்கையளிப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வைரலாகிவிட்டது.


Tags : incident , Viral incident
× RELATED கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக...